கோழி குழம்பு (கோழிக்கறி – செட்டிநாடு பாயி) | Kozhi Kuzhambu(Chicken curry~Chettinad style) in Tamil

கோழி குழம்பு (கோழிக்கறி – செட்டிநாடு பாயி) | Kozhi Kuzhambu(Chicken curry~Chettinad style) in Tamil

கோழி குழம்பு (கோழிக்கறி – செட்டிநாடு பாயி) தேவையான பொருட்கள் ( Ingredients to make Kozhi Kuzhambu(Chicken curry~Chettinad style) in Tamil )

 • 700-800 கிராம் சிறிய கோழி சுத்தப்படுத்தப்பட்டு 8-10 துண்டுகளாக வெட்டப்படுகிறது
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
 • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
 • 8-10 கரிவேப்பிலை இலைகள்
 • சுவைக்கேற்றபடி உப்பு
 • 1/2 தேக்கரண்டி கடுகு
 • 2 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
 • 2-3 பச்சை மிளகாய் நன்றாக நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1/2 தேக்கரண்டி மல்லி விதைகள்
 • 1/4 கப் பால்
 • 2 தக்காளி மசிப்பு
 • 4 தேக்கரண்டி திருவப்பட்ட தேக்காய்
 • 3-4 தேக்கரண்டி எண்ணெய்
 • கழுவப்பட்ட கொத்துமல்லி கையளவு

கோழி குழம்பு (கோழிக்கறி – செட்டிநாடு பாயி) செய்வது எப்படி | How to make Kozhi Kuzhambu(Chicken curry~Chettinad style) in Tamil

 1. ஓடும் நீரில் கோழித்துண்டுகளை நன்றாக கழுவி ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
 2. இஞ்சி-இஞ்சி விழுது, உப்பு, சிவப்பு மிளகாயத்தூள், ஒரு தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை அதே பாத்திரத்தில் சேர்க்கவும். கோழித்துண்டுகளை இரண்டு மணி நேரங்களுக்கு அல்லது இரவு முழுவதும் மேரினேட் செய்யவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்ககி, கரிவேப்பிலை, மல்லி, கடுகு ஆகியவற்றைச் சேர்க்கவும். தீயை நிறுத்திவிட்டு சிறிது ஆறியபிறகு அரைத்து கடாயில் போடவும்… இப்போது பச்சை மிளகாய்களையும் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
 4. இதற்கிடையில் திருவப்பட்ட தேங்காயையும் பாலையும் நன்றாகப் சாந்தாகத் தயாரிக்கவும். இப்போது அதே கடாயியில் தக்காளிக்கூழை சேர்த்து, கடாயின் பக்கவாட்டிலிருந்து மசாலா விடுபடும்வரை சமைக்கவும்.
 5. இப்போது தேங்காய் சாந்தைச் சேர்த்து, அடர்த்தியான ஒரு குழம்பைத் தயாரிக்கத் தொடர்ந்து கிண்டவும், கோழித்துண்டுகளைச் சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 6. மூடி, கோழி மிருதுவாகச் சமைக்கவிடவும் (15-20 நிமிடங்கள்), அல்லது பிரஷர் குக்கரில் ஒரு விசில் கொடுக்கவும். கொஞ்சம் கொத்துமல்லி கரிவேப்பிலை இலைகளைத் தூவி சாதத்துடன் பரிமாறவும்

Share this post

Post Comment