கர்ப்பிணி பெண்களே ! தயவுசெய்து இவற்றைச் செய்யாதீர்கள்.

கர்ப்பிணி பெண்களே ! தயவுசெய்து இவற்றைச் செய்யாதீர்கள்.

கர்ப்பிணி பெண்களே ! தயவுசெய்து இவற்றைச் செய்யாதீர்கள்.

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்ப காலம் முழுவதும் ஆர்வமாக காத்திருக்கும் தருணம் தான் தாயாக மாறும் தருணம். முதன் முறை கர்ப்ப கால கட்டத்தை கழிக்கும் தாய்மார்கள், குழந்தையின் குறையில்லா வளர்ச்சி மற்றும் முழுமையான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பார். அதுவே அவளின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் ஒன்றை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். அதாவது, கர்ப்ப காலத்தில் ஒரு பெண் செய்யும் செயல்கள், அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஒட்டுமொத்த வாழ்வையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு தாய் செய்யும் பல செயல்கள், ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் மிகவும் விலையுயர்ந்ததாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வளர, சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்ப்பது குறிப்பாக இந்த முக்கியமான கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலம் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் : கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்களைவிட, செய்யக் கூடாத சில செயல்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். பிரசவ காலம் வரை சில செயல்களில் கவனத்துடன் இருப்பதால் ஆபத்தில்லாத பிரசவம் மூலம் அழகான குழந்தைக்கு தாயாகும் வரம் கிடைக்கும். ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத செயல்கள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்..

புகை பிடிக்க வேண்டாம் இந்த விஷயத்தை நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம். ஆம், கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பதால், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டு, குறைப் பிரசவம் ஏற்படலாம் அல்லது தாயின் சவ்வு முன்னதாகவே முறியும் நிலை உண்டாகலாம். இதனால் குழந்தைக்கு செல்லும் பிராணவாயு குறைக்கப்படலாம், குழந்தையின் உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதன் காரணமாக குழந்தையின் மூளையில் பாதிப்பு ஏற்படலாம். மற்றும் குழந்தையின் எடை மற்றும் அளவில் குறைபாடு தோன்றலாம்.

மது அருந்துவது
மது அருந்துவதில் எந்த ஒரு எல்லையும் விதிக்கப்படவில்லை, என்பதால் கர்ப்ப காலத்தில் எவ்வளவு மது அருந்தினால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் என்பது குறித்து எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை. இருப்பினும், மது அருந்துவதால் குறிப்பாக கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால், பல்வேறு பிறப்பு குறைபாடுகளான, மோசமான சிசு வளர்ச்சி, கற்பதில் இயலாமை, மனநல பாதிப்பு போன்றவை பிறக்கும் குழந்தைக்கு உண்டாகிறது என்று பல தரப்பட்ட ஆய்வறிக்கைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. உண்மையில், கர்ப்ப காலத்தில் தொடர்ந்து அதிக மது அருந்துவதால் பெடல் அல்கஹால் சின்ட்ரோம் (fetal alcohol syndrome) என்னும் பாதிப்பு குழந்தைக்கு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

சூடான நீரில் குளியல்
அல்லது நீராவிக் குளியல் கர்ப்ப காலத்தில் நீராவிக்குளியல், சௌனா குளியல், சூடான நீரில் குளியல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக சூடான நீரை உடலில் பயன்படுத்துவதால், கருப்பை அதிக சூடாகி, குழந்தை இறப்பும் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் முதல் மூன்று மாதங்களில் சௌனா அல்லது சுடு நீர் குளியல் போன்றவற்றின் அதிகபட்ச வெப்ப வெளிப்பாட்டின் காரணமாக, வயிற்றில் உள்ள குழந்தையின் நரம்பு குழாய்கள் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

அதிகபட்ச உடற்பயிற்சி
கர்ப்பகாலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிதமான உடற்பயிற்சி என்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச உடற்பயிற்சி காரணமாக உங்கள் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 160 ஐ விட அதிகரிக்கும்போது, குழந்தைக்கு செல்லும் பிராணவாயு அளவு குறைகிறது. இதனால் குழந்தைக்கு உயிர்வளி பற்றாக்குறை ஏற்பட்டு, குழந்தையின் மூளைக்கு செல்லும் பிராணவாயு தடுக்கப்பட்டு, மூளை சேதம் உண்டாகும் வாய்ப்புள்ளது

நீண்ட நேரம் நிற்க வேண்டாம்
நீண்ட நேரம் அதாவது தொடர்ந்து பல மணி நேரம் நின்று கொண்டிருப்பதால் வெரிகோஸ் வெயின், உடலில் நீர் வீக்கம், திரவத்தின் அசாதாரண சேர்க்கை போன்றவை உங்கள் பாதத்தில் உண்டாகலாம். ஆகவே முடிந்த அளவு உட்கார்வது, படுப்பது போன்ற செயல்பாடுகளை கர்ப்பகாலத்தில் செய்து வரலாம்.

எக்ஸ்ரே
கர்ப்ப காலத்தில் எக்ஸ்ரே தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நவசியம் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால், அடிவயிற்றுப் பகுதி கதிர் வீச்சுகளால் தாக்கப்படாதவாறு, நன்றாக மூடிக் கொள்வதால் குழந்தை பாதுகாக்கப்படுகிறது. இல்லையேல் குழந்தைக்கு பிறப்புக் குறைபாடு தோன்றலாம். இந்த கதிர்வீச்சுகள் மரபுவழிக் குறைபாடுகள், புற்றுநோய் போன்றவற்றை குழந்தைக்கு உண்டாக்கலாம். அல்லது கருப்பையக இறப்பையும் உண்டாக்கலாம்.

மன அழுத்தம்
மனஅழுத்தம் பல்வேறு விதமான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம். மேலும் தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கிய குறைபாடுகளை உண்டாக்கலாம். கர்ப்ப காலத்தில் தாய்க்கு உண்டாகும் மன அழுத்தம் காரணத்தால், குழந்தை ஒரு எதிர்மறை உணர்வுச் சூழலை அனுபவிக்கும் நிலை உண்டாகலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உறவுகளினால் உண்டாகும் அழுத்தம் காரணமாக, பிரசவத்திற்கு முன்னர் உண்டாகும் அழுத்தம் , குழந்தையின் மன நல வளர்ச்சியில் மாற்றத்தை உண்டாகலாம் , மேலும் குழந்தை பருவத்தில் சில காலகட்டம் வரை ஒரு பய உணர்ச்சியை குழந்தைக்கு உண்டாக்கலாம்.

சமச்சீரற்ற உணவு
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, சரியான உணவை சாப்பிடாமல் இருப்பது , சமச்சீரற்ற உணவை சாப்பிடுவது போன்ற செயல்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மேலும் இந்த கர்ப்பிணி தாயின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இப்படி செய்வதால், பிரசவத்திற்கு பின் உடல் எடையைக் குறைப்பதில் சிரமம் இருக்கலாம்.

பதப்படுத்தப்படாத பால் பொருட்கள்
கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். ஆனால் கால்சியம் சத்தை தாய்மார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் எனபது கவனிக்க வேண்டிய விஷயம். கர்ப்பிணிகள் காய்ச்சாத பச்சை பாலை பருகுவது கர்ப்பிணிகளுக்கு தீமையான ஒரு செயலாகும். பதப்படுத்தப்படாத பச்சை பாலில் கிருமிகள் அப்படியே இருக்கும், இது உங்கள் உடலுக்கு தீமையை உண்டாக்கும். பச்சை பாலில் லிச்டீரியா என்னும் பக்டீரியா உண்டு. இது உடல் நல பாதிப்பு, கருச்சிதைவு, மற்றும் சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் அபாயத்தையும் உண்டாக்கும்.

Share this post

Post Comment